Saturday, 29 March 2014

Critical Theories and Philosophies:-

லலித் கலா அகாடமி: சென்னை

 ஒவ்வொரு படைப்பையும் உருவாக்கும் போது ஓவியர்கள் மனநிலை எப்பொழுதும் ஒரேமாதிரியாக இருக்கும் என்ற ஆழமான கருத்தை மதுவாடையுடன் பதிவு செய்தார் வேல் முருகன். வேல் முருகன் வயது 37 மூத்த ஓவியர் லலித் கலா அகாடமி வேல் முருகன் என்ற மனிதன் அங்கு தவிர்க்க முடியாத நபராக இருக்கின்றார் என்பதை அவரின் நடவடிக்கையின் மூலம் அறியமுடிந்தது. இது வரை 500க்கும் மேற்பட்ட படைப்புகளை உருவாக்கி இருக்கிறார். மேலும் இங்கு சில ஓவியர்களுக்கு தலைவராகவும் செயல்படுகின்றார். இவரின் மேற் பார்வையில் பணிபுரியும் நபர்கள் நந்தகுமார், சுரேந்தர், தியாகராஜன்.

நந்தகுமார் - சென்னை எழும்பூர், கவின் கலைக்கல்லூரி


குலத்துமண்ணை எடுத்து தனது கற்பனைக்கு உருவம் கொடுத்துக் கொண்டிருந்தார் நந்தகுமார். அவர் உருவாக்கிக்கொண்டிருக்கும் படைப்பின் பெயர் Relief Sculpture என்றும் 3-நாட்களாக இதை உருவாக்கி வருவதாக கூறினார். தனது வேலையில் முழு கவனத்தையும் செலுத்தி இருந்தமையால் அவரால் மேற்கொண்டு பேச முடியவில்லை. அதன்பிறகு அவர்கள் செய்யும் வேலையை கவனித்தேன் நந்தகுமாருக்கு உதவியாக தியாகராஜன் இருந்தார். இருவரும் ஒற்றுமையாக வேலை செய்வதை என்னால் உணர முடிந்தது. தியாகராஜன் கீழே கிடந்த ஒரு கல்லை எடுத்து அந்தப்படைப்பில் ஒத்தி எடுத்தார் என்ன ஆச்சர்யம் ஈரமான மணலில் அந்தக் கல்லின் அழுத்தம் ஓவியமாக காட்சித்தந்தது.

சுரேந்தர் (வயது-23)-சென்னை எழும்பூர், கவின் கலைக்கல்லூரி

பகுதி நேர  ஊழியராக  லலித் கலா  அகாடமியில் பணிபுரிகிறார். பல கேள்விகளுக்கு கிண்டலாக தனது கருத்தினை வெளிப்படுத்தினார். லலித் கலா அகாடமி Freeline-மூலமாக ஓவியர்களுக்கு வாய்ப்பு வழங்கி வருகிறது என்ற கருத்தையும் பதிவு செய்தார். வருமையில் தனது வாழ்க்கை நகர்கின்றது என்பதை அவரின் உடை மற்றும் உடல் வெளிக்காட்டிக் கொண்டிருக்கின்றது

அரசு அருங்காட்சியகம்-சென்னை எழும்பூர்
          பல்வேறு காலத்தைச் சேர்ந்த படைப்புகள் ஒருசேர காண்பது ஒரு அற்புதமான அனுபவம். ஒவ்வொரு காலத்திற்கும் பண்பாடு, கலாச்சாரம் எப்படி மாறியுள்ளது மற்றும் அவர்களைப்பற்றிய முழுமையான தகவல்களை அந்தப்படைப்புக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த அறிவிப்பு பலகையில் இருந்து அறிய முடிகிறது. மற்றும் அதிகமான நேரத்தை அருங்காட்சியகத்தில் செலவிடமுடிவதில்லை. முறைப்படுத்தப்பட்டு பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுகின்றனர் மேலும் அங்கு வந்த பார்வையாளர்களின் எண்ணிக்கையும் மிகக் குறைவு.

அருங்காட்சியகத்தில் நான் கவனித்தவை:

-அருங்காட்சி கட்டிடம், படிமக்கூடம், ஐம்பொன் சிலைகள் கட்டிடம்

பல்லவர்கள் காலத்து சிற்பங்களின் தன்மை:

-முகம் நீண்டு இருக்கும், மூக்கு சிறிதாக இருக்கும், கட்டை விரலுக்கு நடுவில் ஆயுதம் பிடிக்கப்பட்டிருக்கும்.

பிந்தைச் சோழர் காலச்சிற்பங்கள்:

-உருவங்களின் கோலங்கள் மரபுச்சார்ந்தவையாக அமைகின்றன, மூக்கு, மார்பு, வயிறு உள்ளிட்டவை கட்டுக்கோப்பாக காட்டப்பட்டிருக்கும்பூநூலில் வயிற்றின் இரு பக்கங்களிலும் சமமான 3 மெள்ளிய வடங்களாய் அமையுமாறு பரப்பி போடப்பட்டிருக்கும்.

முற்கால சோழற்காலச் சிற்பங்கள்:
-பல்லவர் கால சிலைகளில் உள்ளதைவிட இயல்புத்தன்மை குறைவாக காணப்படும்

பெளத்தர்:
          
பெளத்தர்களாயினும், ஹிந்து மதத்தையும் ஆதா¢த்தனர் எனவே அக்காலச் சிற்பங்கள் இருவகை கொள்கையையும் தழுவி நிற்கிறது.

மகாபலிபுரம்:

மல்லை, கடல் மல்லை, மாமல்லை, மாமல்லபுரம் இவை ¨னைத்தும் தற்போதைய மகாபலி புரத்தின் அக்கால பெயர்களாகும். நரசிமவர்மனின் பட்டப்பெயரான மாமல்லன் என்பதிலிருந்தே இந்த ஊர் மாமல்லபுரம் என்று அழைக்கப்படுகின்றது. ¡¢ன் நடுவில் உள்ள (ஜலசயனப் பெருமாள்) ஆலயத்தை தவிர பெரும் பாண்மையான சிற்பங்கள் நரசிமவர்மர் காலத்தைச் சேர்ந்தவை. இவை கி.பி.632 முதல் 668 வரை எழுப்பப்பட்டது. நம் நாட்டின் மொத்தம் 4 வகையான சிற்பங்கள் உள்ளது

1. குகைக் கோயின் என்னும் குடைவரைக் கோயில்
2. ஒற்றைக் கல்லில் செதுக்கப்படும் மோனோலித்ஸ் என்ற வகை சிற்பம்
3. புடைப்புச் சிற்பங்கள் & மாட சிற்பங்கள்
4. கட்டுமானக் கோயில்கள்

இவை அனைத்தும் மாமல்லபுரத்தில் இருப்பது தனிச்சிறப்பு இவற்றின் சிறப்பு கருதி சர்வதேச இயற்கை மற்றும் கலாச்சார பாரம்பா¢ பாதுகாப்புக் குழு இதை உலக மரப்புச் சின்னம் என்று தேர்வு செய்துள்ளனர். கடற்கரை கோவில் மொத்தம் 7 இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளன. இத்தகவல் 14காம் நூற்றான்டில் இங்கு வந்த வெளி நாட்டு மாலுமிகள் குறிப்பிட்டுள்ளனர். ஆனால் தற்போது 2 மட்டுமே உள்ளன மீதம் இருந்த 5 கோவில்கள் கடலுக்குள் மறைந்துவிட்டது என்று சொல்கிறார்கள். மேலும் அங்கு உடைந்த நிலையில் தார லிங்கம் இருக்கு ஆனால் விஷ்னுவின் சிற்பம் முழுமையாக இருக்கு இரு சாதிகளுக்கு இடையே ஏற்பட்ட போரினால் பாரம்பரி கலைகள் அழிக்கப்பட்டுள்ளன என்பது தெளிவாகியுள்ளது.

எனது அனுபவம்:
          
பல்லவ காலத்திற்கு முன்னால் குகையிலோ, கருவரையிலோ உருவ சிற்பங்கள் இல்லை, என்ற தகவலை பல நூல்கள் வெளிப்படுத்தி உள்ள நிலையில் இதை உருவாக்கியவர்கள் பல்லவர்கள்தான் என்று தெளிவாகிறது. பல்லவர்களின் பண்பாடு, கலாச்சாரத்தை அழிக்கும் நோக்குடன் சாளுக்கிய அரசன் செயல்பட்டுள்ளான். அதை நிரூபிக்கும் வகையில் பெரும்பாலான  குகைக்கோயில் கருவரையில் லிங்கம் பெயர்த்து எடுக்கப்பட்டுள்ளது. மற்றும் உடைந்தும் காணப்படுகின்றது. ஆனால் விஷ்னுவின் சிற்பம் எந்தவிதமான சேதமும் இன்றி பெரும்பாலும் காட்சியளிக்கின்றது. இந்த இரு சமூகமும் தனது அடுத்த தலைமுறைக்கு அவர்க்ளைப் பற்றிய தகவல்களை மாறி, மாறி அழித்திருக்கின்றனர் என்பதை மட்டும் தெளிவாக காணமுடிகிறது. தகவல் தொடர்புக்கு இந்த ஆய்வு மிகவும் பயன் உள்ளதாக இருந்தது.     


COMMUNICATION WORKSHOP FOR MARGINALIZED GROUP’S SEMINAR (University Of Madras,Journalism & Communication Department)

முனைவர் ரவீந்திரன் (இதழியல் துறைத் தலைவர்)-

விளிம்பு நிலை மக்கள் சமூகத்தில் பல வகைகளும் பாதிக்கப்படுவதையும் அவர்களை சமுதாயம் எவ்வாறு நடத்துகின்றது என்பதையும் தெளிவாகக் கூறினார். சினிமாவில் இவர்களை தவறாக சித்தரிக்கின்றனர்  இந்த நிலை மாற வேண்டும் என்றும் விளிம்பு நிலை மக்களின் தொடர்பியல் பற்றிய ஒரு தெளிவான கருத்தை மாணவர்களிடம் ஏற்படுத்த வேண்டும் என்று கூறினார்.
மற்ற துறைத் தலைவர்கள் அவர்களின் கருத்தை பதிவு செய்தனர் பொன்னாடை சிறப்பு விருந்தினர்களுக்கு  அனுவிக்கப்பட்டது

சிறப்பு விருந்தினர்கள்
1. சாம்சன்
2. ரோபிலா
3. சுகன்யா

Young age air land founder இவர்கள் விளிம்பு நிலை மக்களின் வாழ்வினை உயர்த்த பல வழிகளிலும் முயற்சி செய்கின்றனர். அவர்களுக்கு ஏற்படும் தீமைகளையும் அதனால் அவர்களின் நிலை தற்போது என்ன என்பதையும் அவரின் ஆய்வறிக்கையில் காண முடிந்தது. மேலும் மாணவர்களிடம் விளிம்பு நிலை மக்களின் நிலையை மாற்ற என்னனென்ன வழிகளை நீங்கள் கொண்டுவர வேண்டும் என்பதை மாணவர்களிடம் கேட்டார். அதற்கு மாணவர்கள் பல பதில்களை கூறினர். அதில் ஒரு மாணவன் நகரும் பள்ளியை விளிம்பு நிலை மக்களுக்காக தொடங்கலாம் என கூறினான்.

Marginalized groups விளிம்பு நிலை மக்கள்

Vagarien என்பதன் பொருள் ஒரு இனத்தின் பெயர் தற்பொழுது நறிக்குறவர் மற்றும் குருவிக்காரர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். இப்படி அழைக்கப்படுவது தவறான ஒரு நிலையாகும் ஏனெனில் இது ஒரு தொழில் பெயராகும். இவர்கள் பேசும் மொழியானது வக்கா¢ஓடி என்று அழைக்கப்படுகின்றது. சுமார் ஒரு லட்சம் பேர் இருந்த Vagarien இன மக்கள் இன்று வெறும் 25,000 பேர் மட்டுமே உள்ளனர் தமிழ்நாட்டில். இதற்கு முதன்மை காரணம் இவர்களிடம் கல்வி அறிவு இல்லை அரசு பல கடுமையான சட்ட திட்டங்களை இவர்கள் மேல் தினித்துள்ளது. அதில் ஒன்று துப்பாக்கி பயன்படுத்த அவர்கள் ஒரு நிரந்தரமான முகவரியை கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்த ஒரு சட்டத்தினால் அவர்களின் நாடோடி வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது சங்க இலக்கியத்தில் குற்றால குறவஞ்சி போன்ற இயல்க்கியங்கள் குறவ இன மக்கள் மலை மலை சார்ந்த இடத்தில் வாழ்பவர்கள் என்று சொல்லப்படுகின்றது. இப்படி சிறப்புமிக்க ஒரு இன மக்களை தமிழக அரசு இன்னும் ST பட்டியலில் சேர்க்கவில்லை நீதிமன்றங்கள் இவர்களை ST பட்டியலில் சேர்க்க சொல்லி ஆணையிட்டும் கண்டு கொள்ளாமல் விடப்பட்டுள்ளனர்

Vagarien இன மக்களின் சிறப்பு என்னவென்றால் முதன் முதலில் தோல் பை யை பயன்படுத்தியவர்கள் மற்றும் பெண்கள் வெவ்வேறு இடத்திற்கு செல்லக் கூடியவர்களாக இருக்கின்றனர், ஆனால் ஆண்கள் ஒரே இடத்தில் இருந்து கொண்டு விலங்குகளை வேட்டையாடி கொண்டு இருக்கின்றனர். உலகிற்கு மார்கெட்டிங்கை அறிமுகப்படுத்தியதும் இவர்களே, பிரபல உணவு வகைகளான பிரியாணி, பாஸ்ட்புட் போன்றவற்றை முதன்முதலில் தயாரித்ததும் இவர்களே, ஒருவனுக்கு ஒருத்தி என்னும் கொள்கை கொண்டவர்கள் ஆவர். Vagarien இன மக்கள் 95% வியாதிகள் கிடையாது. இதற்கு காரணம் இவர்களிடம் மூலிகை மருத்துவ குறிப்புகள் இருக்கின்றன, வசியம் மற்றும் குறி சொல்வதற்கு இவர்களை மிஞ்சிய ட்கள் கிடையாது-கூறியவர் சாம்சன்.

Vagarien இன மக்கள்

ரோபிலா முதன்முதலாக இது போன்ற ஒரு இடத்திற்கு நான் வந்துள்ளேன் பொதுவாக நாங்கள் ரோட்டில் தான் இருப்போம் உங்களைப்போல் நாகரிகமாக இருக்க எனக்கு ஆசைதான் நிரைய படிக்கவும் எனக்கு ஆசை நீங்கள் எல்லாம் எங்களுக்கு முடிந்தால் உதவவும். ஒரு வெகுலித்தனமான பேச்சை நான் உணர்ந்தேன்.      


இயற்கை அழகும், மனித குணமும்

தினந்தோறும் நான் பயணிக்கும் இடங்களில் கடற்கரையும் ஒன்று. விடியற்காலையில் ஈரமண்ணாகவும், புகைமூட்ட வானமாக காட்சியளிக்கும் கடற்கரை மதிய நேரத்தில் தனது கடுப்பை வெயிலின் மூலமாக என்னிடம் தெரிவிப்பது போல் இருக்கு. மனிதன் செய்யக் கூடிய செயல்கள் இயற்கைக்கு எதிராக அமைவதன் விளைவாக தான் உலகம் முலுவதும் கடந்த சில ஆண்டுகளாக இயற்கையின் சீற்றங்கள் அதிகரித்துள்ளது. கடல் நீரின் அதிகரிப்பு ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை செய்துள்ளது. அது போல் உணவு சங்கிலியின் முதன்மையான இடத்தை பெற்றிருந்த புலிகள் இன்று 1000க்கும் குறைவாக உள்ளதென ஆய்வு தெரிவிக்கிறது. இந்த நிலை ஒரு அபாயகரமான நிலைக்கு மனித குலம் செல்கிறது என்பதை நிரூப்பிப்பது போல் உள்ளது. மனிதன் தனது வாழ்வியல் முறையை சுகமாக பயணிக்க தன்னைச் சுற்றியுள்ள இயற்கை வளங்களைக் கூட ரசிக்க தவறிவிடுகிறார்கள். எப்பொழுது மனிதன் இயற்கையின் போக்குக்கு தடைபோடாமல் ஓடும் நதி போல் தெளிவாக இருக்கின்றானோ அப்போது தான் அவனால் தெளிவாக சிந்திக்க முடியும். இயற்கையின் சிறப்பினை திருக்குறல் வாண் சிறப்பு எனும் அதிகாரத்தில் தெளிவாக குறிப்பிட்டுள்ளது.

நீர் இன்று அமையாது உலகெனின்,யார் யார்க்கும்
வான் இன்று அமையாது ஒழுக்கு

பொருள்:- நீரை இன்றி உலகம் அமையாதாயின் யாவர்க்கும் மழையை இன்றி ஒழுக்கம் உண்டாகாது. ஒழுக்கம் மனித குலத்தில் நிலைநாட்ட வேண்டுமென்றால் இயற்கையை மனிதன் மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும் என்று திருவள்ளுவர் தெளிவாக கூறியுள்ளார்.

மனிதனுக்கு பயனுள்ளது அனைவருக்கும் நன்மை தருவது என்று தொன்றுகிறதோ அதை தேர்ந்தெர்டுத்து அதனையே விடாப்பிடியாக பின்பற்றுங்கள் என்று புத்தர் கூறியுள்ளார்.

மனித குனம்:-
சுனாமியில் அடிக்கடி பாதிப்புக்கு உள்ளாகும் ஜப்பான், அமொரிக்கா போன்ற நாடுகள் முன்கூட்டியே கருவியை கண்டனர். ஆனால் உரிய நேரத்தில் அமரிக்கா நமக்கு சொல்லவில்லை. கேட்டால் என்ன சொல்கிறார்கள் தெரியுமா? இந்திய பிரதமர் முகவரி அவர்களுக்கு தெரியவில்லையாம். அவர்கள் கூறியது சுத்த பொய். இந்து மகா சமுத்திரத்தில் உள்ள டிகோகார்சியா தீவு அமரிக்கா கப்பல் படை தளமாகும். இத்தீவுக்கு சுனாமி எச்சரிக்கையை முன்கூட்டியே தந்து அவர்களின் உயிரையும் உடமையையும் பாதுகாத்த அமெரிக்கா நமக்கு தராதது மனிதனின் ஏகாதிபத்தியத்தின் திமிரை வெளிகாட்டுவதாக உள்ளது.

குறிப்பு:-

மனித குனம் பற்றிய தகவல் எது மூட நம்பிக்கை என்னும் புத்தகத்தின் ஆசிரியர் அகத்தியலிங்கம் குறிப்பிட்டுள்ளார்.