Saturday 29 March 2014

COMMUNICATION WORKSHOP FOR MARGINALIZED GROUP’S SEMINAR (University Of Madras,Journalism & Communication Department)

முனைவர் ரவீந்திரன் (இதழியல் துறைத் தலைவர்)-

விளிம்பு நிலை மக்கள் சமூகத்தில் பல வகைகளும் பாதிக்கப்படுவதையும் அவர்களை சமுதாயம் எவ்வாறு நடத்துகின்றது என்பதையும் தெளிவாகக் கூறினார். சினிமாவில் இவர்களை தவறாக சித்தரிக்கின்றனர்  இந்த நிலை மாற வேண்டும் என்றும் விளிம்பு நிலை மக்களின் தொடர்பியல் பற்றிய ஒரு தெளிவான கருத்தை மாணவர்களிடம் ஏற்படுத்த வேண்டும் என்று கூறினார்.
மற்ற துறைத் தலைவர்கள் அவர்களின் கருத்தை பதிவு செய்தனர் பொன்னாடை சிறப்பு விருந்தினர்களுக்கு  அனுவிக்கப்பட்டது

சிறப்பு விருந்தினர்கள்
1. சாம்சன்
2. ரோபிலா
3. சுகன்யா

Young age air land founder இவர்கள் விளிம்பு நிலை மக்களின் வாழ்வினை உயர்த்த பல வழிகளிலும் முயற்சி செய்கின்றனர். அவர்களுக்கு ஏற்படும் தீமைகளையும் அதனால் அவர்களின் நிலை தற்போது என்ன என்பதையும் அவரின் ஆய்வறிக்கையில் காண முடிந்தது. மேலும் மாணவர்களிடம் விளிம்பு நிலை மக்களின் நிலையை மாற்ற என்னனென்ன வழிகளை நீங்கள் கொண்டுவர வேண்டும் என்பதை மாணவர்களிடம் கேட்டார். அதற்கு மாணவர்கள் பல பதில்களை கூறினர். அதில் ஒரு மாணவன் நகரும் பள்ளியை விளிம்பு நிலை மக்களுக்காக தொடங்கலாம் என கூறினான்.

Marginalized groups விளிம்பு நிலை மக்கள்

Vagarien என்பதன் பொருள் ஒரு இனத்தின் பெயர் தற்பொழுது நறிக்குறவர் மற்றும் குருவிக்காரர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். இப்படி அழைக்கப்படுவது தவறான ஒரு நிலையாகும் ஏனெனில் இது ஒரு தொழில் பெயராகும். இவர்கள் பேசும் மொழியானது வக்கா¢ஓடி என்று அழைக்கப்படுகின்றது. சுமார் ஒரு லட்சம் பேர் இருந்த Vagarien இன மக்கள் இன்று வெறும் 25,000 பேர் மட்டுமே உள்ளனர் தமிழ்நாட்டில். இதற்கு முதன்மை காரணம் இவர்களிடம் கல்வி அறிவு இல்லை அரசு பல கடுமையான சட்ட திட்டங்களை இவர்கள் மேல் தினித்துள்ளது. அதில் ஒன்று துப்பாக்கி பயன்படுத்த அவர்கள் ஒரு நிரந்தரமான முகவரியை கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்த ஒரு சட்டத்தினால் அவர்களின் நாடோடி வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது சங்க இலக்கியத்தில் குற்றால குறவஞ்சி போன்ற இயல்க்கியங்கள் குறவ இன மக்கள் மலை மலை சார்ந்த இடத்தில் வாழ்பவர்கள் என்று சொல்லப்படுகின்றது. இப்படி சிறப்புமிக்க ஒரு இன மக்களை தமிழக அரசு இன்னும் ST பட்டியலில் சேர்க்கவில்லை நீதிமன்றங்கள் இவர்களை ST பட்டியலில் சேர்க்க சொல்லி ஆணையிட்டும் கண்டு கொள்ளாமல் விடப்பட்டுள்ளனர்

Vagarien இன மக்களின் சிறப்பு என்னவென்றால் முதன் முதலில் தோல் பை யை பயன்படுத்தியவர்கள் மற்றும் பெண்கள் வெவ்வேறு இடத்திற்கு செல்லக் கூடியவர்களாக இருக்கின்றனர், ஆனால் ஆண்கள் ஒரே இடத்தில் இருந்து கொண்டு விலங்குகளை வேட்டையாடி கொண்டு இருக்கின்றனர். உலகிற்கு மார்கெட்டிங்கை அறிமுகப்படுத்தியதும் இவர்களே, பிரபல உணவு வகைகளான பிரியாணி, பாஸ்ட்புட் போன்றவற்றை முதன்முதலில் தயாரித்ததும் இவர்களே, ஒருவனுக்கு ஒருத்தி என்னும் கொள்கை கொண்டவர்கள் ஆவர். Vagarien இன மக்கள் 95% வியாதிகள் கிடையாது. இதற்கு காரணம் இவர்களிடம் மூலிகை மருத்துவ குறிப்புகள் இருக்கின்றன, வசியம் மற்றும் குறி சொல்வதற்கு இவர்களை மிஞ்சிய ட்கள் கிடையாது-கூறியவர் சாம்சன்.

Vagarien இன மக்கள்

ரோபிலா முதன்முதலாக இது போன்ற ஒரு இடத்திற்கு நான் வந்துள்ளேன் பொதுவாக நாங்கள் ரோட்டில் தான் இருப்போம் உங்களைப்போல் நாகரிகமாக இருக்க எனக்கு ஆசைதான் நிரைய படிக்கவும் எனக்கு ஆசை நீங்கள் எல்லாம் எங்களுக்கு முடிந்தால் உதவவும். ஒரு வெகுலித்தனமான பேச்சை நான் உணர்ந்தேன்.      


No comments:

Post a Comment