லலித் கலா அகாடமி: சென்னை
ஒவ்வொரு படைப்பையும் உருவாக்கும் போது ஓவியர்கள் மனநிலை எப்பொழுதும் ஒரேமாதிரியாக இருக்கும் என்ற ஆழமான கருத்தை மதுவாடையுடன் பதிவு செய்தார் வேல் முருகன். வேல் முருகன் வயது 37 மூத்த ஓவியர் லலித் கலா அகாடமி வேல் முருகன் என்ற மனிதன் அங்கு தவிர்க்க முடியாத நபராக இருக்கின்றார் என்பதை அவரின் நடவடிக்கையின் மூலம் அறியமுடிந்தது. இது வரை 500க்கும் மேற்பட்ட படைப்புகளை உருவாக்கி இருக்கிறார். மேலும் இங்கு சில ஓவியர்களுக்கு தலைவராகவும் செயல்படுகின்றார். இவரின் மேற் பார்வையில் பணிபுரியும் நபர்கள் நந்தகுமார், சுரேந்தர், தியாகராஜன்.
ஒவ்வொரு படைப்பையும் உருவாக்கும் போது ஓவியர்கள் மனநிலை எப்பொழுதும் ஒரேமாதிரியாக இருக்கும் என்ற ஆழமான கருத்தை மதுவாடையுடன் பதிவு செய்தார் வேல் முருகன். வேல் முருகன் வயது 37 மூத்த ஓவியர் லலித் கலா அகாடமி வேல் முருகன் என்ற மனிதன் அங்கு தவிர்க்க முடியாத நபராக இருக்கின்றார் என்பதை அவரின் நடவடிக்கையின் மூலம் அறியமுடிந்தது. இது வரை 500க்கும் மேற்பட்ட படைப்புகளை உருவாக்கி இருக்கிறார். மேலும் இங்கு சில ஓவியர்களுக்கு தலைவராகவும் செயல்படுகின்றார். இவரின் மேற் பார்வையில் பணிபுரியும் நபர்கள் நந்தகுமார், சுரேந்தர், தியாகராஜன்.
நந்தகுமார் - சென்னை
எழும்பூர், கவின் கலைக்கல்லூரி
குலத்துமண்ணை
எடுத்து தனது கற்பனைக்கு உருவம்
கொடுத்துக் கொண்டிருந்தார் நந்தகுமார். அவர் உருவாக்கிக்கொண்டிருக்கும் படைப்பின் பெயர்
Relief Sculpture என்றும்
3-நாட்களாக இதை உருவாக்கி வருவதாக
கூறினார். தனது வேலையில் முழு
கவனத்தையும் செலுத்தி இருந்தமையால் அவரால் மேற்கொண்டு பேச
முடியவில்லை. அதன்பிறகு அவர்கள் செய்யும் வேலையை
கவனித்தேன் நந்தகுமாருக்கு உதவியாக தியாகராஜன் இருந்தார்.
இருவரும் ஒற்றுமையாக வேலை செய்வதை என்னால்
உணர முடிந்தது. தியாகராஜன் கீழே கிடந்த ஒரு
கல்லை எடுத்து அந்தப்படைப்பில் ஒத்தி
எடுத்தார் என்ன ஆச்சர்யம் ஈரமான
மணலில் அந்தக் கல்லின் அழுத்தம்
ஓவியமாக காட்சித்தந்தது.
சுரேந்தர் (வயது-23)-சென்னை
எழும்பூர், கவின் கலைக்கல்லூரி
பகுதி நேர ஊழியராக லலித் கலா அகாடமியில் பணிபுரிகிறார். பல கேள்விகளுக்கு கிண்டலாக தனது கருத்தினை வெளிப்படுத்தினார். லலித் கலா அகாடமி Freeline-மூலமாக ஓவியர்களுக்கு வாய்ப்பு வழங்கி வருகிறது என்ற கருத்தையும் பதிவு செய்தார். வருமையில் தனது வாழ்க்கை நகர்கின்றது என்பதை அவரின் உடை மற்றும் உடல் வெளிக்காட்டிக் கொண்டிருக்கின்றது
அரசு அருங்காட்சியகம்-சென்னை
எழும்பூர்
பல்வேறு காலத்தைச் சேர்ந்த
படைப்புகள் ஒருசேர காண்பது ஒரு
அற்புதமான அனுபவம். ஒவ்வொரு காலத்திற்கும் பண்பாடு,
கலாச்சாரம் எப்படி மாறியுள்ளது மற்றும்
அவர்களைப்பற்றிய முழுமையான தகவல்களை அந்தப்படைப்புக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த அறிவிப்பு
பலகையில் இருந்து அறிய முடிகிறது.
மற்றும் அதிகமான நேரத்தை அருங்காட்சியகத்தில்
செலவிடமுடிவதில்லை. முறைப்படுத்தப்பட்டு பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுகின்றனர் மேலும் அங்கு வந்த
பார்வையாளர்களின் எண்ணிக்கையும் மிகக் குறைவு.
அருங்காட்சியகத்தில்
நான் கவனித்தவை:
-அருங்காட்சி
கட்டிடம், படிமக்கூடம், ஐம்பொன் சிலைகள் கட்டிடம்
பல்லவர்கள்
காலத்து சிற்பங்களின் தன்மை:
-முகம் நீண்டு இருக்கும், மூக்கு
சிறிதாக இருக்கும், கட்டை விரலுக்கு நடுவில்
ஆயுதம் பிடிக்கப்பட்டிருக்கும்.
பிந்தைச்
சோழர் காலச்சிற்பங்கள்:
-உருவங்களின்
கோலங்கள் மரபுச்சார்ந்தவையாக அமைகின்றன, மூக்கு, மார்பு, வயிறு
உள்ளிட்டவை கட்டுக்கோப்பாக காட்டப்பட்டிருக்கும். பூநூலில்
வயிற்றின் இரு பக்கங்களிலும் சமமான
3 மெள்ளிய வடங்களாய் அமையுமாறு பரப்பி போடப்பட்டிருக்கும்.
முற்கால
சோழற்காலச் சிற்பங்கள்:
-பல்லவர்
கால சிலைகளில் உள்ளதைவிட இயல்புத்தன்மை குறைவாக காணப்படும்
பெளத்தர்:
பெளத்தர்களாயினும், ஹிந்து மதத்தையும் ஆதா¢த்தனர் எனவே அக்காலச்
சிற்பங்கள் இருவகை கொள்கையையும் தழுவி
நிற்கிறது.
மகாபலிபுரம்:
மல்லை,
கடல் மல்லை, மாமல்லை, மாமல்லபுரம்
இவை அ¨னைத்தும் தற்போதைய
மகாபலி புரத்தின் அக்கால பெயர்களாகும். நரசிமவர்மனின்
பட்டப்பெயரான மாமல்லன் என்பதிலிருந்தே இந்த ஊர் மாமல்லபுரம்
என்று அழைக்கப்படுகின்றது. ஊ¡¢ன் நடுவில்
உள்ள (ஜலசயனப் பெருமாள்) ஆலயத்தை
தவிர பெரும் பாண்மையான சிற்பங்கள்
நரசிமவர்மர் காலத்தைச் சேர்ந்தவை. இவை கி.பி.632
முதல் 668 வரை எழுப்பப்பட்டது. நம்
நாட்டின் மொத்தம் 4 வகையான சிற்பங்கள் உள்ளது
1. குகைக்
கோயின் என்னும் குடைவரைக் கோயில்
2. ஒற்றைக்
கல்லில் செதுக்கப்படும் மோனோலித்ஸ் என்ற வகை சிற்பம்
3. புடைப்புச்
சிற்பங்கள் & மாட சிற்பங்கள்
4. கட்டுமானக்
கோயில்கள்
இவை அனைத்தும் மாமல்லபுரத்தில் இருப்பது தனிச்சிறப்பு இவற்றின் சிறப்பு கருதி சர்வதேச
இயற்கை மற்றும் கலாச்சார பாரம்பா¢ய பாதுகாப்புக் குழு
இதை உலக மரப்புச் சின்னம்
என்று தேர்வு செய்துள்ளனர். கடற்கரை
கோவில் மொத்தம் 7 இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளன. இத்தகவல் 14காம் நூற்றான்டில் இங்கு
வந்த வெளி நாட்டு மாலுமிகள்
குறிப்பிட்டுள்ளனர். ஆனால் தற்போது 2 மட்டுமே
உள்ளன மீதம் இருந்த 5 கோவில்கள்
கடலுக்குள் மறைந்துவிட்டது என்று சொல்கிறார்கள். மேலும்
அங்கு உடைந்த நிலையில் தார
லிங்கம் இருக்கு ஆனால் விஷ்னுவின்
சிற்பம் முழுமையாக இருக்கு இரு சாதிகளுக்கு
இடையே ஏற்பட்ட போரினால்
பாரம்பரிய கலைகள் அழிக்கப்பட்டுள்ளன
என்பது தெளிவாகியுள்ளது.
எனது அனுபவம்:
பல்லவ காலத்திற்கு முன்னால்
குகையிலோ, கருவரையிலோ உருவ சிற்பங்கள் இல்லை,
என்ற தகவலை பல நூல்கள்
வெளிப்படுத்தி உள்ள நிலையில் இதை
உருவாக்கியவர்கள் பல்லவர்கள்தான் என்று தெளிவாகிறது. பல்லவர்களின்
பண்பாடு, கலாச்சாரத்தை அழிக்கும் நோக்குடன் சாளுக்கிய அரசன் செயல்பட்டுள்ளான். அதை
நிரூபிக்கும் வகையில் பெரும்பாலான
குகைக்கோயில் கருவரையில் லிங்கம் பெயர்த்து எடுக்கப்பட்டுள்ளது.
மற்றும் உடைந்தும் காணப்படுகின்றது. ஆனால் விஷ்னுவின் சிற்பம்
எந்தவிதமான சேதமும் இன்றி பெரும்பாலும்
காட்சியளிக்கின்றது. இந்த இரு சமூகமும்
தனது அடுத்த தலைமுறைக்கு அவர்க்ளைப்
பற்றிய தகவல்களை மாறி, மாறி அழித்திருக்கின்றனர்
என்பதை மட்டும் தெளிவாக காணமுடிகிறது.
தகவல் தொடர்புக்கு இந்த ஆய்வு மிகவும்
பயன் உள்ளதாக இருந்தது.
No comments:
Post a Comment